ஊடக சுதந்திரத்தை இல்லாமற் செய்தவர் ரணிலே - நாமல்

ஊடக சுதந்திரத்தை இல்லாமற் செய்தவர் ரணிலே - நாமல்

by Staff Writer 13-01-2019 | 7:37 PM

ஊடக சுதந்திரத்தை இல்லாமற் செய்தது - இந்த அரசா்ஙகமே என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு சென்றிருந்தனர். பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கட்டடங்களுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டனர். இதேவேளை, கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்று மாலை நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அரசியலமைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்திருந்ததுடன் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் போலி அரசியல் தொடர்பிலும் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
''ரணில் விக்ரமசிங்கவும் மக்களுக்கு வேலை செய்வதில்லை. சுமந்திரனும் வேலை செய்யவில்லை.சுமந்திரன் கடந்த நான்கு வருடங்களாக அரசாங்கத்தில் இருந்தார்.அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவாக வாக்களித்தார்.புதிய அரசியல்அமைப்பினை கொண்டு வருவதாக கூறினர்.நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்பித்தது அரசியல் அமைப்பு அல்ல எனவும் அது வெற்று தாள் என பிரதமர் கூறுகின்றார்.சுமந்திரனால் பிரதமராக்கப்பட்ட ,ரணிலின் கட்சியினரே அரசியல் அமைப்பினை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றனர்.அவ்வாறு எனின் அரசியல் அமைப்பு என்பது பொய்யான விடயம். எனவே சுமந்திரன் கடந்த நான்கு வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். ஊடக சுதந்திரம் இல்லை என்று மஹிந்த ராஜபக்சவிற்கு கூறினார்கள். எங்கள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினார்கள்.ஆனால் உண்மையில் தற்போது தான் ஊடக சுதந்திரம் இல்லாமல் போயுள்ளது.முறிகள் மோசடியில் ஈடுபட்டவர்கள் உள்ளர். ரயில் கொண்டு வருதற்காக 10 வீதம் தரகு பணம் கேட்டவர்களும் உள்ளனர்.அவர்களை தூற்றும் போது அவர்களுக்கு கோபம் வருகின்றது.ரணில் விக்ரமசிங்கவே நல்லாட்சியையும் , ஊடக சுதந்திரத்தையும் இல்லாமல் செய்துள்ளார்.'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.