மாடுகளின் இறப்பினால் பால் உற்பத்தி பாதிப்பு

கிண்ணியாவில் மாடுகளின் இறப்பினால் பால் உற்பத்தி பாதிப்பு

by Staff Writer 12-01-2019 | 8:24 PM
Colombo (News 1st) திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் அண்மைக்காலமாக மாடுகள் இறந்து வருகின்றமை பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. கடந்த சில வாரங்களாக கிண்ணியா பிரதேசத்தில் மாடுகள் அதிகளவில் இறந்து வரும் நிலையைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் பால் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. அதிகளவில் பால் சேகரிக்கப்படும் இடங்களில் ஒன்றான சூரங்கல் பால் சேகரிப்பு நிலையத்தில் அண்மைக்காலமாக சுமார் 600 லிட்டர் வரையான பால் மாத்திரமே சேகரிக்கப்படுகின்றது. இந்நிலையத்தில் நாளாந்தம் சுமார் 6000 முதல் 8000 லிட்டர் வரையில் பால் சேகரிக்கப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.