ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலுக்கு போட்டித்தடை

ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலுக்கு போட்டித்தடை

ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலுக்கு போட்டித்தடை

எழுத்தாளர் Bella Dalima

12 Jan, 2019 | 8:38 pm

இந்திய அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் 34 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு போட்டித்தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தொலைக்காட்சியொன்றில் இவர்கள் தெரிவித்த கருத்தை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ரெய் இந்த போட்டித்தடையை விதித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பெண்ணியம் மற்றும் பாலியல் தொடர்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் முன்வைத்த கருத்துக்களுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.

இதற்கமைய, இவர்கள் இருவருக்கும் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் மீண்டும் இந்தியா நோக்கிப் பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்