புத்தளத்தில் வாய், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

புத்தளத்தில் வாய், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

புத்தளத்தில் வாய், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Jan, 2019 | 3:48 pm

Colombo (News 1st) புத்தளம் – ஆனமடுவ, புனம்பிட்டி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாய், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டவாறு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

66 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் 3 பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

கொலைச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்