தேர்தலே தேவை, புதிய அரசியலமைப்பல்ல: அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரர்

தேர்தலே தேவை, புதிய அரசியலமைப்பல்ல: அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரர்

தேர்தலே தேவை, புதிய அரசியலமைப்பல்ல: அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரர்

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2019 | 10:28 pm

Colombo (News 1st) இன்று மாலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரரை சந்தித்தார்.

இதன்போது தேரர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

அஸ்கிரிய பீடம் என்ற வகையில், நாங்கள் ஆரம்பத்திலிருந்து புதிய அரசியலமைப்பு அத்தியாவசியமற்றது என கூறினோம். மகாநாயக்க தேரர்களும் அதனை வலியுறுத்தினர். சமகால அரசாங்கம் மகாநாயக்க தேரர்களைக் கண்டுகொள்வதில்லை. இது யாருடைய தேவைக்கேற்ப வந்தது என்பது பிரச்சினைக்குரியது. பாராளுமன்றத்தில் பொது நிலைப்பாடு ஒன்றை பெற முடியாது. அரசியலமைப்பு ஒருபோதும் தேவையற்றது. மாகாண சபைகளை கலைப்பதை தவிர தேர்தல் நடத்துவதற்கு எதுவித தேவையும் இல்லை. பொது மக்களுக்கு தீர்மானமெடுக்கும் சந்தர்ப்பத்தை தேர்தல் ஊடாக வழங்க வேண்டும்.

இதேவேளை, அரசியலமைப்பில் எத்தகைய பிளவுகள் இருந்தாலும் குறைந்தபட்சம் மாகாண சபைத் தேர்தலையேனும் நடத்தி மக்கள் விருப்பத்தை பரிசீலிக்க முடியுமாயின் அதுவே சிறந்தது என அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்