by Bella Dalima 12-01-2019 | 6:12 PM
குடும்பத்தினரிடம் இருந்து தப்பிச்சென்று பேங்கொக் விமான நிலையத்தில் தங்கியிருந்த சவுதி நாட்டுப் பெண்ணுக்கு கனடா தஞ்சம் வழங்கியுள்ளது.
18 வயதான குறித்த பெண் குடும்பத்தினருடன் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது தப்பிப்பதற்காக பேங்கொக் விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தார்.
அத்துடன், சொந்த நாட்டிற்குத் திரும்பினால் தாம் கொலை செய்யப்படுவோம் என்பதால் விமான நிலைய தங்குமிடத்திலிருந்து வௌியேறாமலிருந்தார்.
தமக்கு தஞ்சம் வழங்க வேண்டுமென சர்வதேச நாடுகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஐ.நா சபையின் பரிந்துரைக்கமைய தஞ்சம் வழங்குவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தஞ்சம் பெற்ற குறித்த பெண் இன்றைய தினம் கனடாவுக்கு பயணிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.