குழுக்களை குப்பைக்கூடைக்குள் போடும் ரணில் விக்ரமசிங்க

குழுக்களை குப்பைக்கூடைக்குள் போடும் ரணில் விக்ரமசிங்க

எழுத்தாளர் Bella Dalima

12 Jan, 2019 | 10:17 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பு பிரேரணை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது.

அரசியலமைப்பு பிரேரணை ஊடாக நாட்டிற்குள் ஜனநாயக சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினருக்குள்ள ஒழுக்கத்தை பாதுகாப்பதற்கான உரிமை என்ன?

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவப் பிரச்சினை ஏற்பட்டிருந்த சந்தர்ப்பங்களில் குழுக்களை அமைப்பதே சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வந்தது.

அதன் பிரகாரம் பண்டித ரத்ன குழு, தலைமைத்துவ சபை மூலமாக நிகழ்காலத்தில் விஜயவர்தன குழு வரைக்கும் நகர்ந்துள்ளது.

இவை அனைத்து குழுக்கள் மற்றும் சபைகள் மூலமாக கட்சியின் தலைவர் தமக்கு எதிரான செயற்பாடுகளை அடிபணியச் செய்ய காலத்தினைத் தேடிக்கொண்டது மாத்திரமே நிகழ்ந்துள்ளது.

அதிகாரத்தை மீண்டும் தன்வசப்படுத்தியவுடன் ரணில் விக்ரமசிங்க குழுக்களை குப்பைக்கூடைக்குள் போடுவதையே மேற்கொள்கின்றார்.

விஜயவர்தன குழு அறிக்கைக்கும் நடைபெற்றுள்ளது இதுவல்லவா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்