கண்டி தீ விபத்து: ராம்ராஜின் குடும்பத்தினருக்கு நியூஸ்பெஸ்ட் அமோக வரவேற்பு

கண்டி தீ விபத்து: ராம்ராஜின் குடும்பத்தினருக்கு நியூஸ்பெஸ்ட் அமோக வரவேற்பு

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2019 | 9:29 pm

Colombo (News 1st) கண்டி – யட்டிநுவர பகுதியில் கடந்த 8 ஆம் திகதி நாட்டை சோகத்தில் ஆழ்த்திய தீ விபத்து சம்பவம், தந்தையின் ஆழமான அன்பிற்கு சான்று பகர்கின்றது.

இன, மத, மொழி, பால் வேறுபாடுகளைக் கடந்த மனிதநேயத்தின் மகத்துவத்தை இந்த சம்பவம் பறைசாற்றுகின்றது.

தனது உயிரைப் பணயம் வைத்து, 3 பிள்ளைகளினதும் மனைவியினதும் உயிரைக் காத்த ராம்ராஜ் நாட்டு மக்கள் பலரதும் இதயத்தில் வீரத்தந்தையாக இடம்பிடித்தார்.

அவர் இன்று தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் இன்று நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு வருகை தந்திருந்தார்.

ராம்ராஜின் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக இதன்போது நியூஸ்ஃபெஸ்ட்டால் அன்பளிப்பொன்றும்
வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்