அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்?

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்?

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2019 | 7:43 pm

 Colombo (News 1st) அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை இன்று வௌிப்படுத்தினர்.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய குறிப்பிட்டார்.

யானை கலவரப்பட வேண்டிய தேவை இல்லை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உரிய நேரத்தில் மக்களுக்கு கூறுவோம்

என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெட்ரோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக சஜித் பிரேமதாச ஆடைகளைத் தைத்து தயாராகின்றார். அந்த ஆடை அவருக்கு தேவையற்றது. ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தைத்து வைத்துள்ளார். சம்பிக்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரும் புதிய ஆடைகள் இரண்டினைத் தைக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியினர் இதுவரையில் நான்கு ஜனாதிபதி ஆடைகளைத் தைத்து தயார் நிலையில் வைத்துள்ளனர்

என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்