English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Jan, 2019 | 7:42 pm
Colombo (News 1st) முகத்தை மூடியவாறு வருகை தந்து சிவில் அமைப்புகள் என தம்மை அடையாளங்காட்டிக்கொண்ட சிலர் நேற்று (10) ஊடக நிறுவனங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊடகங்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்காக வருகை தந்த இந்தக் குழுவினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து ஜனநாயகத்தை மீள உருவாக்குமாறு கோரி சில இடங்களில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களாவர்.
கடந்த நவம்பர் 18 ஆம் திகதி கொட்டும் மழையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக குழுமி தம்மை இலங்கை பெண்கள் என அடையாளம் காட்டிக்கொண்டவர்களும் இக்குழுவில் அடங்குவர்.
இதேவேளை, நவம்பர் 29 ஆம் திகதி திதுலன ஹதவத்த என்ற குழுவினர் முகங்களை மூடியவாறு மீண்டும் ஜனாதிபதி காரியாலயத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
ஊடக நிறுவனங்களுக்கு முன்பாக நேற்று எதிர்ப்பில் ஈடுபட்ட பெரும்பாலானோர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தினைக் கைவிட்டனர்.
கறுப்பு ஊடகம் என சிலர் எச்சரிக்கை விடுத்திருந்த பின்புலத்திலேயே இவர்கள் ஊடக நிறுவனங்களுக்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இவர்களின் பின்னால் இருப்பது யார்? இவர்கள் நிறைவேற்றுவது யாருடைய தேவையை?
10 Jul, 2022 | 08:34 PM
07 Jul, 2022 | 04:43 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS