தேசிய சேதனப் பயிர் செய்கை கொள்கையை வகுக்க பரிந்துரை

தேசிய சேதனப் பயிர் செய்கை கொள்கையை வகுக்க பரிந்துரை

தேசிய சேதனப் பயிர் செய்கை கொள்கையை வகுக்க பரிந்துரை

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2019 | 4:15 pm

Colombo (News 1st) நாட்டில் சேதனப் பயிர் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கான பரிந்துரைகளை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மேற்கொள்ளவுள்ளது.

இதனடிப்படையில், தேசிய சேதனப் பயிர் செய்கை கொள்கையொன்றை வகுப்பதற்கான பரிந்துரைகளை விவசாயத் திணைக்களத்திற்கு முன்வைக்கவுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை சேதன விவசாயப் பிரிவுடன் உறவுகளைப் பலப்படுத்தும் வகையில் செயற்படவுள்ளதுடன், இம்முறையில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளைக் கண்டறியும் வகையில் தேசிய தரவுத்தளம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்