கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2019 | 8:04 pm

Colombo (News 1st) கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வாழைச்சேனை , கிண்ணையடி பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் கிண்ணையடி சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிரான் பகுதியில் கடைகள் சில மூடப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, வந்தாறுமூலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களும் வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்