கொங்கோ ஜனாதிபதி தேர்தலில் பெலிக்ஸ் ஷிசெகெடி வெற்றி

கொங்கோ குடியரசில் முதற்தடவையாக ஆட்சியதிகாரம் பகிரப்பட்டுள்ளது

by Staff Writer 10-01-2019 | 1:38 PM
கொங்கோ குடியரசில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொங்கோ குடியரசில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர் பெலிக்ஸ் ஷிசெகெடி (Felix Tshisekedi) வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் இன்று அறிவித்துள்ளது. 38.57 வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். இதனூடாக, கொங்கோ குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதலாவது எதிர்க்கட்சி வேட்பாளராக பெலிக்ஸ் ஷிசெக்கெடி, அந்நாட்டு அரசியல் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதனிடையே, 18 வருட காலமாக கொங்கோ குடியரசின் அரச தலைவராக செயற்பட்ட ஜோசப் கபிலாவின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 196060 ஆம் ஆண்டில், பெய்ஜிங்கிடமிருந்து விடுதலை பெற்ற கொங்கோ குடியரசின் ஆட்சியதிகாரம், முதற்தடவையாக பகிரப்பட்டுள்ளது. கொங்கோ குடியரசில் கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், அதன் முடிவுகள் வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. 50 வீதத்துக்கும் குறைவான வாக்குகளே தேர்தலில் வாக்களிப்பின்போது கிடைக்கப்பெற்றுள்ளதால் முடிவுகளை வெளியிடுவதில் அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் ஆரம்பத்தில் சிக்கல்நிலையை எதிர்நோக்கியிருந்தது. எவ்வாறாயினும், தேர்தல் முடிவுகள் கடந்த 6ஆம் திகதி வெளியிட்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.