ஹாலி – எல பகுதியில் காணாமல்போனதாகக் கூறப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு

ஹாலி – எல பகுதியில் காணாமல்போனதாகக் கூறப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு

ஹாலி – எல பகுதியில் காணாமல்போனதாகக் கூறப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2019 | 7:25 am

Colombo (News 1st) பதுளை, ஹாலி – எல, கந்தகெதர சாரணியா தோட்டத்தில், ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல்போனதாகக் கூறப்படும் சிறுமி, குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

9 வயதான மகேந்திரன் திலானி என்ற சிறுமியே குழிக்குளிருந்து இவ்வாறு நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி சிறுமி காணாமல் போனதாக அவருடைய சித்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், ஒரு வருடத்தின் பின்னர் சிறுமியின் தாய் மற்றும் சிறிய தந்தையால் வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தினூடாக இரகசியமாக பேணப்பட்ட விடயம் அம்பலமாகியுள்ளது.

அதற்கமைய, சாரணியா தோட்டத்தில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பதுளை நீதவான் சமிந்த கருணாதாசவின் முன்னிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் சிறிய தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாலி – எல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்