புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Jan, 2019 | 6:00 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் ஆகக்குறைந்தது இரு மொழிகளாவது இடம்பெறுமாறு பெயர்ப்பலகைகளைப் போடுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என வட மாகாணத்தின் புதிய ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

02. ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கீர்த்தி தென்னகோன், தென் மாகாண ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

03. ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளரான ஜனக ரணவக்கவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

04. நாடு 3 வகையான அபாயங்களை எதிர்கொண்டுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

05. கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) இலங்கையை வந்தடைந்த கல்ஃப் ஸ்ட்ரீம் 550 ரக தனியார் விமானத்தில் வந்தவர்கள் தொடர்பிலான ஆய்வு.

06. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில், பிரதிவாதிகள் இருவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

07. அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்வதற்கு மீண்டும் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

08. உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துள்ளனர்.

09. சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளை, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

10. ‘சுரக்ஸா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை, இந்த வருடம் முதல் அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளை முடித்துக்கொள்வதற்கு, தமது தடுப்புச்சுவர் திட்டத்துக்கு நிதியொதுக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

02. தமிழகத்தின் 33ஆவது புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாகியுள்ளது.

விளையாட்டுச் செய்தி

01. இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இலங்கை – அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 16 பேரைக் கொண்ட இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்