பிரான்ஸில் ஜெட் விமானம் விபத்து: விமானப் பணியாளர்கள் இருவர் மாயம்

பிரான்ஸில் ஜெட் விமானம் விபத்து: விமானப் பணியாளர்கள் இருவர் மாயம்

பிரான்ஸில் ஜெட் விமானம் விபத்து: விமானப் பணியாளர்கள் இருவர் மாயம்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2019 | 1:53 pm

பிரான்ஸில் மிராஜ் வகையைச் சேர்ந்த சிறிய ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, குறித்த விமான பணியாளர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு பிரான்ஸில் மிராஜ் 2000-D ரக ஜெட் விமானம் ஒன்று மலையுடன் மோதி நேற்று விபத்துக்குள்ளானது.

விபத்திற்குள்ளான குறித்த விமானத்தின் உடைந்த பாகங்கள் ஜூரா பிராந்தியத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சுமார் 3,280 அடி பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விமானத்தில் பயணித்த 2 பணியாளர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேடப்படும் இருவரையும் உயிருடன் மீட்போம் என எதிர்பார்ப்பதாக, விமானப் படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விமானம் மோதுண்டதிலிருந்து விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் நிலவும் கடும் பனியுடனான வானிலை காரணமாகவே விபத்து ஏற்றபட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தேடுதல் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்