நாட்டின் சில பகுதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

நாட்டின் சில பகுதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

நாட்டின் சில பகுதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2019 | 1:13 pm

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இன்று மற்றும் நாளை டெங்கு நோய் ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் இனங்காணப்பட்ட பகுதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

டெங்கு நோயின் பரவுகையைக் கட்டுப்படுத்துவதற்காக 40 டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவுகளை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலைகள், கட்டட நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதி, அலுவலலகங்கள், மத வழிபாட்டு பகுதிகள் போன்ற பகுதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட ஆரம்பம் முதலான 9 நாட்களுக்குள் டெங்கு நோய் காரணமாக 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்