நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Jan, 2019 | 8:54 pm

Colombo (News 1st) எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலாகவுள்ளது.

இதனடிப்படையில், 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசலின் விலை 2 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

125 ரூபாவாகக் காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் புதிய விலை 123 ரூபாவாக அமைந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 149 ரூபாவில் இருந்து 147 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் புதிய விலை 99 ரூபா என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே அதன் விலை 101 ரூபாவாகக் காணப்பட்டது.

மூன்று ரூபாவால் விலை குறைக்கப்பட்ட சுப்பர் டீசலின் புதிய விலை 118 ரூபாவாக அமைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்