தகவல் தொழில்நுட்பத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர்

தகவல் தொழில்நுட்பத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர்

தகவல் தொழில்நுட்பத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2019 | 6:57 am

Colombo (News 1st) இந்த வருடம், தகவல் தொழில்நுட்பக் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கரந்தெனிய மத்திய கல்லூரியின் 75ஆவது வருட பூர்த்தி விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

மேலும், ஆங்கில மொழிக்கான ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான தேவையும் காணப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தகவல் தொழில்நுட்பக் கல்வியின் அடைவுமட்டத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்காக இந்த வருடம் அதிகளவில் நிதி ஒதுக்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்