கிளிநொச்சி வௌ்ளம் தொடர்பில் ஆராய புதிய குழு நியமனம்

கிளிநொச்சி வௌ்ளம் தொடர்பில் ஆராய புதிய குழு நியமனம்

கிளிநொச்சி வௌ்ளம் தொடர்பில் ஆராய புதிய குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2019 | 1:09 pm

Colombo (News 1st) கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ளம் தொடர்பில் ஆராய்வதற்கு, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் புதிய விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் தாமதமாகி திறக்கப்பட்டமையாலா வௌ்ளம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணை குழுவினூடாக அறிக்கை கோரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணை குழுவிலிருந்து அங்கத்தவர் ஒருவர் நீக்கப்பட்டமைக்கு பதிலாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடுக் குளத்தின் நிர்மானப்பணிகளின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து 21 நாட்களில் அறிக்கை சமர்பிக்குமாறு விசாரணை குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்