எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2019 | 7:08 am

Colombo (News 1st) எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெலியத்த – கெடமான்ன பகுதியில் அதிவேக மார்க்கத்தில் கடமையாற்றி வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளார்.

எரிவாயு சிலிண்டரை வெட்ட முயற்சித்த வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் தங்காலை – தோர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நுவரெலியா – ராகலை பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்