சுரக்ஸா காப்புறுதி திட்ட கொடுப்பனவுகள் அதிகரிப்பு

சுரக்ஸா மாணவர் காப்புறுதித் திட்டக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

by Staff Writer 09-01-2019 | 7:52 AM
Colombo (News 1st) 'சுரக்ஸா' மாணவர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை, இந்த வருடம் முதல் அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு 1,000 ரூபா முதல் 3,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிக மருத்துவ செலவீனங்களுக்காக வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு 20,000 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, முற்றாக ஊனமுற்ற நிலையை எதிர்நோக்க ​நேரிட்டால் அதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு 1 இலட்சம் ரூபாவில் இருந்து 2 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், பெற்றோர்களை இழக்கும் சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் கொடுப்பனவு 75,000 ரூபாவில் இருந்து 2 இலட்சம் ரூா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.