ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் - மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சந்திப்பு

by Staff Writer 09-01-2019 | 1:23 PM
Colombo (News 1st) நோர்வேயின் ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் குணரட்ணம் ஹம்சாயினி இன்று, மட்டக்களப்பு மாநகரசபை மேயரை சந்தித்துள்ளார். நோர்வேயின் ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் குணரெட்ணம் ஹம்சாயினி மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி. சரவணபவனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகரசபை மேயரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் குணரெட்ணம் ஹம்சாயினி இதன்போது மாநகரசபை உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்பின்னர் மாநகரசபை வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.