சியம்பலாண்டுவ பகுதியில் மலேரியா நோயின் தாக்கம்

சியம்பலாண்டுவ பகுதியில் மலேரியா நோயின் தாக்கம்

சியம்பலாண்டுவ பகுதியில் மலேரியா நோயின் தாக்கம்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2019 | 7:03 am

Colombo (News 1st) மலேரியா தொற்றற்ற நாடாக 2016ஆம் ஆண்டில் இலங்கை மாறியது.

இது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் மலேரியா தொற்று பதிவாகியுள்ளது.

மலேரியா தொற்றுள்ள இருவர் தொடர்பான தகவல்கள் சியம்பலாண்டுவ பகுதியில் அண்மையில் பதிவானது.

அந்த இருவரில் ஒருவர் சியம்பலாண்டுவ – அதிமலே பகுதியிலுள்ள தனியார் சீனித் தொழிற்சாலையின் கட்டட நிர்மாணங்களுக்காக வருகை தந்த இந்தியப் பிரஜையாவார்.

45 வயதான மீகொட பகுதியைச் சேர்ந்த மற்றையவர், அந்தத் தொழிற்சாலையில் சேவையாற்றிய இலங்கையராவார்.

குறித்த இந்தியப் பிரஜையிடமிருந்து இலங்கைப் பிரஜைக்கு மலேரியாத் தொற்று பரவியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்

சியம்பலாண்டுவ பகுதியில் மலேரியா நோயை இனங்காணுவதற்கான விசேட செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, மலேரியா நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் மலேரியா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய, விசேட செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளதாக மலேரியா நோய் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் இரத்தப் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மலேரியா நோய் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்