இலங்கை – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அணி அறிவிப்பு

இலங்கை – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அணி அறிவிப்பு

இலங்கை – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அணி அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2019 | 10:12 am

Colombo (News 1st) இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இலங்கை – அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 16 பேரைக் கொண்ட இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2 போட்டிகளைக் கொண்ட அவுஸ்திரேலியா – இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நியூஸிலாந்துடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அவருக்குப் பதிலாக இடதுகை துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குசல் ஜனித் பெரேரா கடந்த வருடம் ஜூன் மாதம் இடம்பெற்ற இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடரில் இறுதியாக பங்கேற்றிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதுரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குசல் ஜனித் பெரேரா 657 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், அதில் ஒரு சதம் மற்றும் மூன்று, அரைச் சதங்கள் உள்ளடங்குகின்றன.

நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின்போது 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கியிருந்த தனுஷ்க குணதிலக 4 இனிங்ஸிலும் விளையாடியபோதிலும் 16 ஓட்டங்களையே அவரால் பெற முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நியூஸிலாந்துடனான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் உபாதைக்குள்ளான ஏஞ்சலோ மெதியூஸ் இம்முறை டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

எவ்வாறாயினும், 17 பேர் கொண்ட டெஸ்ட் அணி நியூஸிலாந்து தொடரின்போது பெயரிடப்பட்டிருந்த போதிலும் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது 16 பேரைக் கொண்ட அணியே பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைமைப் பதவியில் தினேஷ் சந்திமால் தொடர்ந்தும் நீடிப்பதுடன் உப தலைவராக திமுத் கருணாரத்ன செயற்படவுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக 17ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதி வரை பயிற்சிப் போட்டி இடம்பெறவுள்ளதுடன் 24ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்ரேனில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது போட்டி எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்