76 ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கல் விழா கலிபோர்னியாவில் நடைபெற்றது

76 ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கல் விழா கலிபோர்னியாவில் நடைபெற்றது

76 ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கல் விழா கலிபோர்னியாவில் நடைபெற்றது

எழுத்தாளர் Bella Dalima

08 Jan, 2019 | 3:44 pm

76 ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கல் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றது.

ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விருது வழங்கல் விழாவை ஆன்டி சாம்பெர்க் (Andy Samberg) மற்றும் சான்ட்ரா ஓஹ் (Sandra Oh) ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கோல்டன் குளோப் விருது வழங்கல் விழாவில் பொஹிமியன் ராப்சோடி (Bohemian Rhapsody) எனும் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதைத் தட்டிச்சென்றது. கிரீன் புக் (Green Book) என்ற திரைபடத்திற்கு அதிகபட்சமாக 3 விருதுகள் கிடைத்தன. சிறந்த மியூசிக்கல் அல்லது நகைச்சுவை படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளில் கிரீன் புக் திரைப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன.

வைஸ் (Vice) படத்தில் நடித்ததற்காக ஹொலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேலுக்கு (Christian Bale) சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது தி வைஃப் (The Wife) படத்தில் நடித்த கிளென் க்ளோஸ் (Glenn Close) எனும் நடிகைக்கு கிடைத்தது.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக மெக்ஸிகோ நாட்டின் ரோமா (Roma) திரைப்படம் தெரிவு செய்யப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான விருது ரோமாவை இயக்கிய அல்போன்ஸோ குவாரனுக்கு (Alfonso Cuarón) கிடைத்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்