பண்டாரநாயக்கவின் கொள்கைகளை விற்றுத்தின்றார்கள்

பண்டாரநாயக்கவின் கொள்கைகளையும் பெயரையும் விற்றுத்தின்றவர்கள் இருக்கின்றார்கள்: சந்திரிக்கா

by Staff Writer 08-01-2019 | 8:02 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் S.W.R.D. பண்டாரநாயக்கவின் 120 ஆவது ஜனன தினம் இன்று நினைவுகூரப்பட்டது. கொழும்பு - காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு அருகில் இந்த நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. இன்று காலை உருவச்சிலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலர் அஞ்சலி செலுத்தியதன் பின்னர் லக்கல புதிய நகரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்விற்காகப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் ஆரம்பமான நினைவு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்திரா பண்டாரநாயக்க உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். விழா நிறைவில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வருகை தந்திருந்த அரசியல்வாதிகளுடன் சிநேகப்பூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதன்போது, விஜித் விஜயமுனி சொய்சாவுடனும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துரையாடினார். இதனையடுத்து, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பண்டாரநாயக்கவின் கொள்கையையும் பெயரையும் விற்றுத்தின்ற திருடர்களும் கொலையாளிகளும் நாட்டில் இருப்பதாகவும் அவரின் சரியான கொள்கைகள் தம்மிடமே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.