புதிய லக்கல நகரம் மக்களிடம் கையளிப்பு

புதிய லக்கல நகரம் மக்களிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2019 | 11:45 am

Colombo (News 1st) மொரகஹகந்த, களுகங்கை நீர்த்தேக்கத்தால் காணிகளை இழந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட புதிய லக்கல நகரம் இன்று (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன.

இதனை முன்னிட்டு, லக்கல புதிய நகரம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

4,500 மில்லியன் ரூபா செலவில் புதிய லக்கல நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

75 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரில் பொலிஸ் நிலையம், கூட்டுறவு மண்டபம், புதிய சுகாதார நிலையங்கள், விளையாட்டு மைதானம், பிரதேசசபை கட்டடம் உள்ளிட்ட 112 கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர 26 அரச நிறுவனங்களும் புதிய லக்கல நகரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்