பொதுஜன பெரமுனவின் கே.ஜி.குலதிஸ்ஸ விளக்கமறியலில்

பொதுஜன பெரமுன உறுப்பினர் கே. ஜி. குலதிஸ்ஸ விளக்கமறியலில்

by Fazlullah Mubarak 07-01-2019 | 4:58 PM

தெமட்டகொட பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில், இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகரசபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் கே. ஜி. குலதிஸ்ஸ, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் தொடர்பில், கொழும்பு மாநகரசபையின் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் இன்று புதுக்கடை இலக்கம் ஒன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையுடன் செயற்பட்டமை, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.