.webp)
சாலி மகேந்திரன் குறிப்பிடும் பிட்டிபன குழுவை பிரதிநிதித்துவப்படுத்தியது ஐக்கிய தேசிய கட்சியின் 3 சட்டத்தரணிகளே. கோப் குழுவிற்கு விரல் நீட்ட முடியாது. தகவல்களை திரட்டும் அதிகாரம் மாத்திரமே அந்த குழுவிற்குள்ளது. உயர்நீதிமன்றம் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வழக்கு விசாரணைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது முழுநாடும் அறிந்த விடயமே. சாலி மகேந்திரன் குறித்த பத்திரிகைக்கு இவ்வாறு கூறியிருந்தாதாலும் அவரின் கூற்று முற்றிலும் பொய்யானதும் அடிப்படையற்றதும் என்பதை ஜனாதிபதி ஆனைக்குழுவின் அறிக்கையில் உறுதியாகின்றது.எனினும் உண்மை இதற்கு முற்றிலும் வேறுபட்டதல்லவா?
பேர்பச்சுவல் நிறுவனம் பெற்றுக் கொண்ட முழுத் தொகையின் ஒரு பகுதி மத்தியவங்கியின் உள்ளக தகவல்களை பெற்றுக் கொண்டு மற்றும் சந்தையை திரிவுபடுத்தி பெற்றுக் கொண்டுள்ளதுடன், அதன் பெறுமதி கிட்டத்தட்ட 8,529 மில்லியன் ரூபாவாகும்.2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக செயற்படுகின்றார். நாட்டின் நீதிமன்றம் சுயாதீனமாகவும் பலமாகவும் காணப்படுவதாக பிரதமர் பல தடவைகள் கூறியுள்ளார். அவ்வாறு சுயாதீன மற்றும் பலமான நீதிமன்றத்திற்கு அர்ஜூன மகேந்திரன் அவரின் தந்தை கூறுவதைப் போன்று அச்சப்படுவது அவருடைய குற்றவாளி என்பதனாலா? நியூஸ்பெஸ்ட் உள்ளிட்ட தனியார் ஊடக நிறுவனங்கள் தொடர்ந்தும் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள வேண்டும் என கோரின. முறிகள் ஆணைக்குழுவின் அறிக்கை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஒரு வருடம் கடந்தும் இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளவில்லை. அர்ஜூன மகேந்திரனின் தந்தையான சாலி மகேந்திரனுக்குக் கூறவேண்டிய சில விடயங்கள் காணப்படுகின்றன. ஊழல்மிக்க முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மாத்திரமே இதுவரை வௌிவராதுள்ளது. முழு நாடும் கோரிய வருடாந்த கணக்காய்வு அறிக்கையை எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆகவே, ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துவதை விடுத்து தமது மகன் மற்றும் அவரின் நெருங்கிய அரசியல்வாதிகள் இணைந்து இந்த ஊழல் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் பல்வேறுபட்ட தகவல்கள் எம்மிடமுள்ளன.
கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிவதைத் தவிருங்கள்...