அமெரிக்காவில் புதிய சட்டமூலம் நிறைவேற்றம்

அமெரிக்காவில் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதிநிதிகள் சபை தெரிவிப்பு

by Staff Writer 06-01-2019 | 1:57 PM
அமெரிக்காவில் முடங்கிப்போயுள்ள பகுதியளவிலான அரசதுறைகளை மீள ஆரம்பிப்பதற்காக புதிய சட்டமூலமொன்று நிறைவேற்றப்படவுள்ளதாக, பிரதிநிதிகள் சபையின் அவைத்தலைவர் நான்ஸி பெலோசி (Nancy Pelosi) தெரிவித்துள்ளார். இந்தப் புதிய சட்டமூலத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதனூடாக அடுத்த வாரமளவில் அரசதுறைப் பணிகளை வழமைக்குக் கொண்டுவர முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசதுறைகளின் பகுதியளவிலான முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினருக்கும் ஜனநாயகக்கட்சியின் பேச்சாளர்களுக்குமிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருந்தது. தமது கனவுத்திட்டமாகிய அமெரிக்க - மெக்ஸிக்கோ எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்புவதற்கு, ட்ரம்ப், 5.6 மில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும், குறித்த நிதியொதுக்கீட்டை ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையுள்ள பிரதிநிதிகள் சபை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.