இலங்கை கிரிக்கெட் தொடர்பில் முரளிதரன் கருத்து

மலையகத்தில் ஏன் கிரிக்கெட் மைதானம் இல்லை என கிரிக்கெட் போர்ட்டை கேளுங்கள் - முத்தையா முரளிதரன்

by Staff Writer 05-01-2019 | 8:58 PM
Colombo (News 1st) முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், ஹட்டனில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். இதன்போது, கேள்வி - மலையகத்தில் உள்ளவர்களை கிரிக்கெட்டில் முன் கொண்டுவருவதற்குத் திட்டம் இருக்கிறதா? பதில் - அடிப்படையிலிருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். அதை செய்வதற்குத் தான் கிரிக்கெட் போர்ட் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு வருமானம் வருகிறது. அவர்களின் வருமானம் 5 வருடங்களில் 100 மில்லியன் டொலர். இந்தக் கேள்வியை கிரிக்கெட் போர்ட்ல கேளுங்கள். ஏன் மலையகத்தில் கிரிக்கெட் க்ரவுண்ட் (மைதானம்) இல்லை. இதற்குத் தான் கன்ஸ்சிடியூசன் மாற்றுமாறு நான் கிரிக்கெட் போர்டுக்குக் கூறினேன். Provincial system தை கொண்டுவருமாறு கூறினேன். இப்போது க்ளப் சிஸ்டம் தான் இருக்கிறது. இலங்கையிலுள்ள 20 க்ளபும் கொழும்பில் தான் இருக்கின்றன. கண்டியிலிருந்து கொழும்புக்குப் போய்தான் நானும் வந்தேன். இங்கே வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கேள்வி - இலங்கை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது? பதில் - 20 வருடங்களாக நாம் முன்னிலையில் இருந்திருக்கிறோம். கடந்த 3 வருடங்களாக நன்றாக விளையாடவில்லை. என்ன காரணம் என்று தெரியாது. உள்ளுக்குள் போய் பார்த்தால் தான் தெரியும். வௌியில் இருந்து சொல்வதற்கு இலேசான வேலை. அட்மினிஸ்டேஷனை மட்டும் குறைசொல்ல முடியாது. ப்ளேயர்ஸையும் குறை கூற வேண்டும். இதற்குத் தீர்வை அவர்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். நம்மாள் கண்டுபிடிக்க இயலாது. விளையாடுகின்றவர்களும் கோச்சர்சும் அட்மினிஸ்ரேஷனும் சேர்ந்து தீர்வை எடுக்க வேண்டும். அவர்களுக்கு காசில் பிரச்சினை இல்லை. ICC மூலமாகவும் நிறைய காசு வருகிறது. கடந்த 20 வருட கால வெற்றிப்பயணத்தை எப்படி முன்னெடுப்பது என அவர்கள் தீர்வு ஒன்று எடுக்க வேண்டும் என முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.