அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை - முரளி

அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை - முத்தையா முரளிதரன்

by Staff Writer 05-01-2019 | 8:41 PM
Colombo (News 1st) அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை என முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்திய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரவதற்கு எனக்கு விருப்பமில்லை. நான் அரசியலில் அனுபவசாலியுமில்லை. 1,000 ரூபா இருபது நாளைக்கு 20,000 கிடைத்தால் உங்களால் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? அது போதாது. எப்படிக் கொடுப்பது என விமர்சித்துப் பார்க்க வேண்டும். 1000 இல்லை. ஆயிரத்திற்கு மேல கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு 30,000 சரி தேவை. இரண்டு பேர் சரி வேலை செய்ய வேண்டும். 50,000 இல்லாவிடில் 3 பிள்ளைகள் உள்ள குடும்பத்தை நடத்த இயலாது. தோட்டத்தொழிலாளர்களுக்கு 600 ரூபா தான் கிடைக்கிறது. 600 ரூபாவுக்கு 20 நாள் வேலை கொடுத்தால் 12,000 ரூபா. வருமானம் கீழ்நோக்கிப்போகிறது. அதை உயர்த்த வேண்டும். ரஜினிகாந்த் சொல்ற மாதிரிதான், வாறனா வரலயா... அப்படி இல்லை. அரசியலில் எனக்கு விருப்பமில்லை. இந்த சேவை எனக்கு பிடிச்சிருக்கு. அத்தோடு, இந்த டியூசனால இந்த நாடே கெட்டுப்போகிறது. டியூசனுக்கு அட்வடைஸ் பண்றாங்க. கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். டியூசனை நிறுத்த வேண்டும். மக்களை ஹர்த்தால் பண்ண விடாதீர்கள். மக்களை வேலை செய்ய விடுங்கள். வேலைக்குப் போகாதே என சொல்வார்கள். அந்த பத்து நாள் காசை கொடுக்க முடியுமா? முடியாது. அதிலயும் பாதிக்கிறது அந்த மக்கள் தான் என முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.