விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பால்மா புதிதாகப் பொதியிட்டு சந்தைகளுக்கு விநியோகம்

விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பால்மா புதிதாகப் பொதியிட்டு சந்தைகளுக்கு விநியோகம்

விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பால்மா புதிதாகப் பொதியிட்டு சந்தைகளுக்கு விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2019 | 2:53 pm

Colombo (News 1st) விலங்களுக்காக ஒதுக்கப்பட்ட பால்மா தொகையைப் புதிதாகப் பொதியிட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

வேவல்தெனிய – தெனிஹெல பகுதியிலேயே இதற்கான சுற்றுவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 14,000 கிலோகிராம் பால்மா மற்றும் 400 கிராம் பால்மா பக்கற்றுகள் 2250 உம், கொழும்பு விசேட குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நியூஸிலாந்தில் தயாரிக்கப்பட்ட பால்மா பக்கற்றுகள் என கடந்த சில நாட்களாக சந்தைகளில் இவை விநியோகிக்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டதுடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 7 ஆம் திகதி துல்கிரிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் சந்தேகநபர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்