மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் வௌ்ளோட்டம் நாளை

மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் வௌ்ளோட்டம் நாளை

மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் வௌ்ளோட்டம் நாளை

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2019 | 2:45 pm

Colombo (News 1st) மாத்தறை – பெலியத்த வரையிலான ரயில் பாதையின் வௌ்ளோட்டம் நாளை (06) இடம்பெறவுள்ளது.

மாத்தறை – கதிர்காமம் ரயில் பாதையின் முதற்கட்டமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ள மாத்தறை – பெலியத்த வரையிலான ரயில் பாதையின் வௌ்ளோட்டமே நாளை நடைபெறவுள்ளது.

இதன்போது, ரயில் சேவையானது, பெலியத்தயிலிருந்து மாத்தறை நோக்கி செல்லவுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை முன்னெடுக்கப்படவுள்ள ரயில்சேவை 3 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன் முதன்கட்டமாகவே மாத்தறையிலிருந்து 26 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பெலியத்த வரையில் ரயில்சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டமாக பெலியத்தயிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை 48 கிலோமீற்றர் தூரமும் மூன்றாம் கட்டமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரையிலான 39 கிலோமீற்றர் தூரமும் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.

இலங்கையில் மிக நீளமான சுரங்க ரயில் பாதை மாத்தறை – பெலியத்த பாதையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 615 மீற்றர் நீளமான சுரங்கப்பாதையும் 268 நீளமான இரண்டு சுரங்கப் பாதைகளும் இங்கு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்