பொத்துவிலில் தனது சகோதரரைக் கொலை செய்த நபர் கைது

பொத்துவிலில் தனது சகோதரரைக் கொலை செய்த நபர் கைது

பொத்துவிலில் தனது சகோதரரைக் கொலை செய்த நபர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2019 | 3:01 pm

Colombo (News 1st) பொத்துவில் – அருகம்பை பகுதியில் தனது இளைய சகோதரரைக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 39 வயதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு வலுப்பெற்றதை அடுத்து, இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, போத்தல் ஒன்றினால் இளைய சகோதரர் தாக்கப்பட்டதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

24 வயதான இளைஞரே சகோதரரால் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் இன்று பொத்துவில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்