புனித திரிபீடகம் இலங்கையின் தேசிய மரபுரிமையாகப் பிரகடனம்

புனித திரிபீடகம் இலங்கையின் தேசிய மரபுரிமையாகப் பிரகடனம்

புனித திரிபீடகம் இலங்கையின் தேசிய மரபுரிமையாகப் பிரகடனம்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2019 | 2:29 pm

Colombo (News 1st) புனித திரிபீடகத்தை, இலங்கையின் தேசிய மரபுரிமையாக உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

மாத்தளையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அலுவிகாரையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த நிகழ்வுகளுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளில் சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுத்தபீடகம், அபி தம்ப பீடகம் மற்றும் வினைய பீடகம் ஆகிய 3 பீடகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த திரிபீடகம், கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மஹிந்த தேரரின் வருகையினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற பேறாகவும் மரபுரிமையாகவும் திகழ்கின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்