நீர்கொழும்பில் நாய் ஒன்று எரியூட்டி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது

நீர்கொழும்பில் நாய் ஒன்று எரியூட்டி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது

நீர்கொழும்பில் நாய் ஒன்று எரியூட்டி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2019 | 2:21 pm

Colombo (News 1st) நீர்கொழும்பு – கொப்பர சந்தியிலுள்ள வீடொன்றில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்றை எரியூட்டி கொன்றமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், நேற்று மாலை நீர்கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் குறித்த பகுதியில் கூலித் தொழில் செய்பவர் எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த 31 ஆம் திகதி கூண்டிற்கு மண்ணெய் ஊற்றி லெப்ரடோ (labrador) இனத்தை சேர்ந்த குறித்த நாய் எரியூட்டப்பட்டுள்ளது.

எரிகாயங்களுக்குள்ளான நாய் கடந்த முதலாம் திகதி இரவு உயிரிழந்தது.

நீர்கொழும்பு தலைமையகத்தின் பொலிஸ் இன்ஸ்பெக்டரின் தலைமையிலான குழுவொன்றும் குற்றத்தடுப்புப் பிரிவின் குழுவொன்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

நாயை எரியூட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, 071 859 16 30 அல்லது 071 859 16 26 இலக்கங்களுக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்