சுனில் சாந்த சிறையிலிருந்து தப்பிச்சென்றமைக்கு உதவிய நபர் கைது

சுனில் சாந்த சிறையிலிருந்து தப்பிச்சென்றமைக்கு உதவிய நபர் கைது

சுனில் சாந்த சிறையிலிருந்து தப்பிச்சென்றமைக்கு உதவிய நபர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2019 | 3:54 pm

Colombo (News 1st) சுனில் சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் சிறைச்சாலைக்குள் இருந்து தப்பிச்செல்வதற்கு உதவி புரிந்த நபர், லுணுகம்வெஹர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக் கட்டுப்பாட்டாளர் என்ற போர்வையில் குறித்த சந்தேகநபர் சிறைச்சாலைக்கு சென்று சுனில் சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் தப்பிச்செல்ல உதவி புரிந்துள்ளார்.

சந்தேகநபர் இராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட சிப்பாய் எனவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சுனில் சாந்த என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர், கேகாலை சிறைச்சாலையிலிருந்து கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்றபோது கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ஆம் திகதி தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்