இந்த வருடத்தில் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்ப்பு

இந்த வருடத்தில் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்ப்பு

இந்த வருடத்தில் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்ப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2019 | 3:06 pm

Colombo (News 1st) இந்த வருடத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் எதிர்பார்ப்பதாக சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இந்த வருடத்தில் கடந்த வருடத்தை விட 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகின்றது.

நடப்பாண்டின் இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் 5 பில்லியன் டொலர் வருமானமும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சுற்றுலா அதிகாரசபையின் தரவுகளுக்கு அமைய, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்