ஹட்டன் – வனராஜா தோட்டத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் ஒருதொகை தேயிலை

ஹட்டன் – வனராஜா தோட்டத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் ஒருதொகை தேயிலை

ஹட்டன் – வனராஜா தோட்டத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் ஒருதொகை தேயிலை

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2019 | 7:52 pm

Colombo (News 1st) ஹட்டன் – வனராஜா தோட்டத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

கழிவுத் தேயிலை அகற்றும் பகுதிக்குள், பயன்படுத்தக்கூடிய சிறந்த தரதமிக்க தேயிலைத் தூள் கொட்டப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.

வனராஜா தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிக்கு சென்றபோது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொழிலாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, தேயிலை தொழிற்சாலைக்குள் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, கணக்காய்விற்கு காண்பிக்காத சுமார் 4000 கிலோகிராம் தேயிலைத் தூள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தோட்ட நிர்வாகத்தினரால் இந்தத் தேயிலை மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பல இலட்சம் ரூபா பெறுமதியான சிறந்த தரமான தேயிலையே இவ்வாறு மறைத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்