பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்

by Staff Writer 04-01-2019 | 4:14 PM
Colombo (News 1st) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 72 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 27 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 45 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.