அமைச்சுக்களுக்கான விடயப்பரப்புகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்களிற்காக ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2019 | 2:25 pm

Colombo (News 1st) புதிய அமைச்சுக்களுக்கான விடயப்பரப்புகள் தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மேற்கொள்ளப்படவேண்டிய சில திருத்தங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில், ஜனாதிபதி பரிசீலித்ததன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள், தமது அமைச்சுக்களுக்கான விடயப்பரப்புகள் தொடர்பில் முன்வைத்த வேண்டுகோளை பரிசீலனை செய்ததன் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், திருத்தங்களுடன் கூடிய அமைச்சுக்களுக்கான விடயப்பரப்புகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமா என அரச அச்சகத்திடம், நியூஸ்பெஸ்ட் வினவியபோது, இதுவரை திருத்தங்களுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் கிடைக்கவில்லை என அச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்