டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கலாம்

டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கலாம்

by Staff Writer 03-01-2019 | 2:24 PM
Colombo (News 1st) எதிர்வரும் மாதங்களில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத் தரப்புகள் தெரிவித்துள்ளன. 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018 ஆம் ஆண்டு டெங்கு நோயளார்களின் எண்ணிக்கை 75 வீதமாக குறைவடைந்திருந்ததாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் வைத்தியர் ஹசித்த திசேரா குறிப்பிட்டுள்ளார். எனினும், கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இளம் பராயத்தினர் டெங்கு காய்ச்சல் குறித்து அவதானமின்றி செயற்படுவதே, அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதற்கு காரணம் எனவும் வைத்தியர் ஹசித்த திசேரா கூறியுள்ளார். 2017 ஆண்டு நாடு முழுவதும் 1,86,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டில் 50,000 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளனர். இதேவேளை, கடந்த வருடம் டெங்கு காய்ச்சலினால் 50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.