கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு தினமும் விசாரணைக்கு

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு 22 முதல் தினமும் விசாரணைக்கு

by Staff Writer 03-01-2019 | 2:33 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று தீர்மானித்துள்ளது. மெதமுல்ல பகுதியில் உள்ள டீ.ஏ. ராஜபக்ஸ நூதனசாலையின் நிர்மாணத்திற்காக, 3 கோடியே 39 இலட்சம் ரூபா அரச நிதியை பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஸ, நீதிமன்ற அனுமதியுடன் வௌிநாட்டுக்கு சென்றுள்ளார். அவரைத் தவிர்ந்த ஏனைய 6 பிரதிவாதிகளும் இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதிகளுக்குத் தேவையான ஆவணங்கள் உரிய முறையில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உறுதி செய்துக்கொள்வதற்கு, தொடர் விசாரணைக்கு முன்பதாக எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.