அரச வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் அதிகரிப்பு

அரச வருமானத்தை மொத்த தேசிய உற்பத்தியில் அதிகரிக்கத் திட்டம்

by Staff Writer 03-01-2019 | 6:58 PM
Colombo (News 1st) அரச வருமானத்தை, மொத்த தேசிய உற்பத்தியில் 17 வீதத்தை விட அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, அரச மீண்டுவரும் செலவீனத்தை, மொத்த தேசிய உற்பத்தியில் 15 வீதமாக வரையறுப்பதற்கும் அரச முதலீடுகளை, மொத்த தேசிய உற்பத்தியில் 5.5 வீதமாகப் பேணுவதற்கும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வரவுசெலவுத் திட்ட பற்றாகுறையை 3.5 வீதமாக மட்டுப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தவிர, மீள செலுத்தப்படாத அரச கடனை, மொத்த தேசிய உற்பத்தியில் 70 வீதத்திலும் குறைவாகப் பேணுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.