by Staff Writer 02-01-2019 | 4:05 PM
Colombo (News 1st) தெங்குப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் நிலத்தைப் பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கைககளை முன்னெடுக்கவுள்ளதாக, தெங்குசெய்கை சபை தெரிவித்துள்ளது.
இதன்கீழ், தெங்கு செய்கை நிலங்களுக்கு பசளை பயன்படுத்துவது, ஈரத்தன்மையுடன் நிலத்தைப் பாதுகாப்பது போன்ற செயற்பாடுகளுக்குத் தேவையான தொழிநுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெங்கு செய்கையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்காக தெங்குசெய்கை சபையினால் நிதி வழங்கப்படவுள்ளது.