வறுமை ஒழிப்பை நோக்காகக் கொண்டு புதிய வருடத்திற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

வறுமை ஒழிப்பை நோக்காகக் கொண்டு புதிய வருடத்திற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

வறுமை ஒழிப்பை நோக்காகக் கொண்டு புதிய வருடத்திற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2019 | 2:26 pm

Colombo (News 1st) வறுமை ஒழிப்பினை முதன்மை நோக்காக் கொண்டு புதிய வருடத்திற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ‘எழுச்சி பெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே, ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

அத்துடன், போதைப்பொருள் உள்ளிட்ட சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சகல சக்திகளையும் இல்லாதொழித்தல் தொடர்பில் விசேட கவனத்துடன் செயற்படும் அதேவேளை, அதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டத்தினை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

நிலவும் சாதகமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பொலன்னறுவை மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தின் 2019 ஆம் ஆண்டுக்குரிய புதிய அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடலும் ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்