புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2019 | 9:51 pm

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது, கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுவருடத் தினத்தன்று, கிட்டத்தட்ட 150 மத்திய அமெரிக்கர்கள் கல்போர்னியாவின் தென் பகுதிக்கு செல்வதற்காக டிஜுவானா நகருக்கு அருகிலுள்ள நகரைக் கடந்துள்ளனர்.

இதன்போதே இவர்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் கற்களை வீசியதன் பின்னரே, அவர்கள் மீது பாதிகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளபோதிலும், படையினரின் தாக்குதலின் பின்னரே அகதிகள் கற்களை வீசியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான இத்தகைய தாக்குதல், கடந்த வருடம் நவம்பர் மாதத்தின் பின்னர் இரண்டாவது தடவையாக இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களர்களுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கை அறிவிப்பின் பின்னர், இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்