ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதி

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதி

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதி

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2019 | 3:00 pm

Colombo (News 1st) சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று தெரிவித்துள்ளார்.

2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறியமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்தது.

பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட 2010 முதல் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சொத்து விபரங்களை
சமர்ப்பிக்கத் தவறியதாகத் தெரிவித்து அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 5 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்